தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர் குறுகிய காலத்திற்குள் தேசிய விருது பெற்றவர் என்பதும் முக்கியமாகும்.
தற்பொழுதும் பிஸியாக நடித்து வரும் இவர் கன்னியாகுமரி அருகிலுள்ள, தனது பூர்வீக கிராமமான திருக்குறுங்குடிக்கு சென்று வந்த அற்புதமான அனுபவத்தை புகைப்படங்களோடு இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி கிராமத்தில் உள்ள தனது உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டது மட்டுமல்லாமல், 2300 ஆண்டுகள் பழமையான நம்பி ராயர் கோவிலுக்கும் சென்றார்
எனது முன்னோர்கள் வீட்டுக்கும் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயிலுக்கும் சென்ற அற்புத அனுபவம். கட்டிடக்கலையை ரசித்தது மட்டுமல்லாமல், அமைதியையும், நேர்மறை உணர்வையும் அதிகம் உணர்ந்தேன், என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தியுடன் அவரது தாயார் மேனகா சுரேஷ், பாட்டி சரோஜா, சகோதரி ரேவதி மற்றும் அவரது கணவர் ஆகியோரும் உடன் சென்றனர்.பூர்வீக கிராமத்துக்கு சென்று வந்த கீர்த்தியின் படங்கள் இன்ஸ்டகிராமில் 1 மில்லியன் லைக்ஸை நெருங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!