• Nov 14 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்நடிகை குஷ்பு- இவ்வளவு மோசமான உடல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இணைந்து பணியாற்றிய குஷ்பு அதன்பின் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. 


இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து மனம்திறந்து பேசி இருந்தார். அதன்படி தனக்கு 8 வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். நடிகை குஷ்புவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.


இது ஒரு புறம் இருக்க நல்ல கதாப்பாத்திரங்கள் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் தற்பொழது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


அதில் காய்ச்சல் உங்களைத் தாக்கும் போது! மோசமான காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொன்றது. #அடினோவைரஸ் மோசமானது. காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் தவிர்க்க வேண்டாம். அவ்வாறு செய்வதற்கான அறிகுறிகளை உங்கள் உடல் கொடுக்கும்போது மெதுவாக்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்  என்றும் பதிவிட்டுள்ளார்..

இதன் மூலம் இவர் காய்ச்சலால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement