• Sep 21 2024

மாடலிங் துறையில் இருக்கும் போது ஏற்பட்ட அவமானத்தை ஓபனாகப் பேசிய நடிகை க்ரித்தி சனோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2014ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹீரோபன்டி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை க்ரித்தி சனோன். தெலுங்கில் அதே ஆண்டு வெளியான நெனொக்கடின் படத்திலும் இவர் நடித்திருந்தார். கலங்க், பானிபட், மிமி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து வந்த க்ரித்தி சனோன் சமீபத்தில் பிரபாஸுடன் இணைந்து ஆதி புருஷ் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்திருந்தார்.அந்த படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் 2021 க்ரித்தி சனோன் நடித்த மற்றொரு படமான மிமி என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.


க்ரித்தி சனோனுக்கு கிடைத்த இந்த பெருமைக்காக ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.இந்நிலையில் க்ரித்தி சனோன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நுழைய முதல் மாடலிங்கில் நுழைந்த போது பட்ட அசிங்கம் பற்றி பேசி இருக்கிறார்.


'அது என்னுடைய முதல் ரேம்ப் ஷோ, எனது ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது, அதை பார்த்து choreographer என்னை திட்டிவிட்டார்.''50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அழுதுவிட்டேன். அதற்கு பிறகு நான் அந்த choreographer உடன் பணியாற்றவில்லை' என க்ரித்தி சனோன் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


Advertisement

Advertisement