• Sep 20 2024

பத்திரிக்கையாளரை திட்டிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்-கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்-கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல கேள்விகளை கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரே ஒரு கேள்வியால் ஆப் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தற்போதைய காலகட்டத்தில்  சினிமாவில் இடம்பெறும்  பல கிசுகிசு செய்திகளையும் நட்சத்திரங்களில் அந்தரங்க செய்திகளை புட்டுபுட்டு வைத்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.



சமீபகாலமாக நடிகைகளை பற்றி அவதூறாக பேசியும் அசிங்கப்படுத்தியும் பேசி வருவதை பலர் கண்டித்து கருத்துக்களை கூறிவருகிறார்கள்.அப்படி இருந்தும் அதனை பொருட்படுத்தாது தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார் பயில்வான். அந்தவரிசையில் நடிகை ஓவியா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி கேவளமாக பேசியதாக நடிகைகள் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.



இந்நிலையில் இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், பயில்வான் அவர்களுக்கு கால் செய்து கண்டபடி திட்டி பேசியுள்ளாராம்.

அதற்கு பயில்வானும் விட்டு வைக்காது  பல கேள்விகளை கேட்டுள்ளார் என கூறியுள்ளார். என் கணவர் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா என்று மிரட்டி பேசியதற்கு ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு போனை கட் செய்து ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


அத்தோடு நடிகை நடிகர்களை பற்றி நான் பேசுவது பலர் எனக்கு கால் செய்து மிரட்டியுள்ளார்கள். அவர்களின் செய்தியை ஆதாரம் இல்லாமல் நான் கூற மாட்டேன் என்று கூறியுள்ளார்.




Advertisement

Advertisement