• Sep 21 2024

பைக் டூரில் அஜித்துடன் சேர்ந்து மாஸாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மஞ்சுவாரியார்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏ.கே 61 படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்து வருகின்றார்.படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் அஜித். இவர் தற்பொழுது AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகின்றார். போனி கபூர் தயாரித்து வருகின்றார். 


பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு Bangkok-ல் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் படக்குழு இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, நடிகர் அஜித் மற்றும் அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர் இருவரும் வெளிமாநிலங்களுக்கு பைக் டிரிப் சென்றுள்ளனர்.


இந்நிலையில் இன்று நடிகை மஞ்சு வாரியருக்கு பிறந்தநாள் அவர் தனது பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக அஜித்துடன் பைக் டிரிப்பில் கொண்டாடியது போல் தான் தெரிகிறது.அத்தோடு தனது டுவிட்டர் நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள நடிகையான மஞ்சு வாரியார் தனுஷ் நடிப்பில் வெளியானஅசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement