• Sep 20 2024

மீண்டும் ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா நடிகை மீனா? ஹீரோ யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாக வும் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்தவர். தற்போது மீனா சினிமாவில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

சென்ற வருடம் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவை மீண்டும் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நடிகர் ராமராஜன் ஏற்கனவே சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்து உத்தமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தான் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம் என சொல்லப்படுகிறது. 


Advertisement

Advertisement