தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க் முடியாத முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி,கமல் ,அஜித் எனப் பல முன்னணி நடிகர் களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.
1985-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகனமான இவர், 1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.
இந்நிலையில் உச்சம் பெற்ற நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார்.
வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து மீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.. ‘‘ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவுல அவருடைய வீட்டுக்குப் பக்கத்துல நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதா தெரியுது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
- நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?
- தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!