• Sep 21 2024

நடிகை மும்தாஜ்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? ப்ப்பா..தலையே கிர்ர்னு சுத்துதே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1980ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த மும்தாஜ் சிறுவயதில் மும்பையில் தான் வளர்ந்தார். நடிகை ஸ்ரீதேவி தான் இவருக்கு மிகப்பெரிய ரோல் மாடலே. ஸ்கூல் படிக்கும் போதே தனது அறை முழுக்க ஸ்ரீதேவியின் போட்டோக்களைத் தான் ஒட்டி வைத்திருப்பேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோவை பள்ளி வாகனம் கடக்கும் போதெல்லாம் கொக்குப் போல இவரது கழுத்து திரும்பி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாராவது தெரியுறாங்களான்னு பார்ப்பாராம். அந்த ஆர்வம் தான் 19 வயதில் மோனிசா என் மோனாலிஸா படத்தில் நடிக்க டி. ராஜேந்தர் அணுகியதும் ஓகே சொல்லி உள்ளார் மும்தாஜ்.

மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, ஸ்டார், வேதம், சாக்கலேட், ரோஜாக் கூட்டம், மகா நடிகன், குத்து, செல்லமே, வீராசாமி, கடைசியாக தமிழில் 2009ம் ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மும்தாஜ்.

 விஜய்யுடன் குஷி படத்தில் இடம்பெற்ற அந்த "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பிரசாந்த் உடன் ஸ்டார் படத்தில் "மச்சினியே மச்ச மச்சினியே" சாக்லேட் படத்தில் "கொக்கர கிரி கிரி", "மல மல மருதமலை" உள்ளிட்ட பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மும்தாஜ் கடைசியாக பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சுத்தம் தான் சோறு போடும் என டாய்லெட் சுத்தம் பண்ணி ரசிகர்களை மீண்டும் கவர்ந்த மும்தாஜ் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து விட்டு 91வது நாள் வெளியேறினார்.

விஷால் நடித்த செல்லமே படத்தில் விவேக் உடனான காமெடி காட்சிகளில் மும்தாஜின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் என்ன இருக்கு என விவேக் காமெடி பண்ணியிருப்பார். பல ஆண்டுகள் சினிமாவில் கடுமையாக உழைத்த நடிகை மும்தாஜிடம் மொத்தமாக 20 முதல் 25 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

Advertisement