• Sep 20 2024

காதல் கணவருடன் இணைந்து கோலாகலமாக தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை நக்ஷத்திரா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்திரா குட்டிசேரி.இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார்.

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை க் கவர்ந்தார்.இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வள்ளி திருமணம் என்னும் சீரியலிலும் நடித்திருந்தார்.


இவ்வாறாக ரசிகர்களின் குறும்பு நாயகியாக வலம் வந்த நக்ஷத்திரா விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.


இப்படியான நிலையில் இவர் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்தினைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு கணவர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement