• Nov 10 2024

நடிகை நமீதாவிற்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள்-அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபல்யமாக வந்தவர் தான் நடிகை நமீதா. இவர் மச்சான்ஸ் என்று அழைத்தே தமிழக மக்களை கவர்ந்தவர்.

ஆரம்பத்தில் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் காலப்போக்கில் கவர்ச்சியிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்ததால் படவாய்பினை இழந்தார். சில படங்களில் நடித்து வந்தாலும் அவை இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

இதனால் படவாய்ப்பின்றி இன்றி இருந்த இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். இருப்பினும் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சரியாக விளையாட காரணத்தினாலும் வெளியேற்றப்பட்டார்.

அதற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறுஇருக்கையில் அண்மையில் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. இன்று அவர் கோவிலுக்கு கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள் உடன் சென்று வழிபட்டு இருக்கிறார்.

எனினும் அதன் பின் அவர் இந்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார். 



அதாவது அதில் தெரிவித்ததாவது...ஹரே கிருஷ்ணா! 🙏இந்த நல்ல சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம்.



குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனை - மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அவர்களின் சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனது கர்ப்பப் பயணத்தில் என்னை வழிநடத்தி, என் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்ததற்காக டாக்டர் புவனேஷ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு நான் உண்மையிலேயே கடமைப்பட்டிருக்கிறேன். டாக்டர் ஈஸ்வர் மற்றும் டாக்டர் வேலு முருகன் எனது புதிய தாய்மையிலும் எனக்கு உதவுகிறார்கள். 🤰 சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்காக டாக்டர் நரேஷ்க்கு எனது சிறப்புக் குறிப்பு.என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement