• Sep 20 2024

பிக்பாஸ் பிரபலத்துடன் நடிகை நயன்தாரா..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 சுமார் 19 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அத்தோடு காரணம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தங்களை நடிகைகள் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி, பல்வேறு சர்ச்சை மற்றும் சவால்களை கலந்து சாதித்தவர் தான் நடிகை நயன்தாரா.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மாபெரும் அந்தஸ்தை தன்வசமாகியுள்ள நயன்தாரா.எனனும் சமீப காலமாகவே திரையுலகில் பேரிடியை சந்தித்து வருகிறார். இவர் கதையின் நாயகியாக நடித்த. O2 , மற்றும் கனெக்ட் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் தோல்வியை தழுவியது.

மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.

எனினும் தற்போது நயன்தாராவின் கை வசம், நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வரும் 'ஜவான்' , தனி ஒருவன் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கும் 'இறைவன்', மற்றும் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

  நயன் தன்னுடைய கணவருக்கு உறுதுணையாக அவர் இயக்க இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ள படத்தில் மிகவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வரை இப்படம் குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் பிரபலம் ஆன சாக்ஷிஅகர்வால் நடிகை நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம நயனுக்கா இந்த நிலமை ...எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டா..வயது முதிர்ந்த தோற்றம் போல் உள்ளது என கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement