• Sep 20 2024

முதல் முறையாக மாதவனுடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா?- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வரும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் நயன்தாரா அண்மையில் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றார். இதனால் பல சர்ச்சைகளை சந்தித்தார். இந்த நிலையில் நயன்தாரா வரும் 18ம் திகதி தனது 38 வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவுள்ளார்.

 தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் இந்த சிறப்பு நாளைக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் பலரும் இப்பவே பிறந்தநாள் வாழ்த்துக் கூற ஆரம்பித்து விட்டார்கள்.


மேலும் 'ஜவான்' படத்திற்குப் பிறகு, நயன்தாரா தனது இரு மகன்களுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதால், சிறிது இடைவெளிக்குப் பிறகு வேலைக்குத் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அறிமுக இயக்குநர் சஷிகாந்த் இயக்கும் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நயன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை இல்லை.இந்த படம் ஜனவரி 2023-ல் தொடங்கும் என்றும், மாதவனும் நயன்தாராவும் திரையில் ஜோடியாக வருவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement