நித்யா மேனன் ஒரு இந்திய சினிமா நடிகை. இவர் தமிழ் , தெலுங்கு ,மையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான நடிப்பை வெளிக்காட்டினால் எப்படி இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என காட்டி வருபவர் தான் நித்யா மேனன்.இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன்.
ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் என வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை கேட்ட அவரின் ரசிகர்கள் யார் அந்த ஹீரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து அவர் இன்னும் எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
Listen News!