• Sep 21 2024

பிரபல நடிகரைக் காதலித்து வரும் நடிகை நித்யா மேனன்- எப்போது டும் டும் டும் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை நித்யா மேனன்.இவர் தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி துணை நடிகையாக நடித்து வந்தவர்.

இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும், தமிழில் 180 படத்திலும் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த வகையில் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகின்றார்.

ஹைதராபாத் மார்டன் லவ் என்ற அந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement