• Nov 14 2024

நடிகை பூஜா ஹெக்டேக்கு அறுவைச் சிகிச்சை... அதுவும் இந்த இடத்திலா..? என்னாச்சு..? வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் வாழ்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.


பின்னர் மீணடும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இருப்பினும் இப்படம் தோல்வியையே சந்தித்தது. மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை என இவர் மீது விமர்சனம் ஒன்று உள்ளது. 


இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பின்னர் புதிய படங்களில் எதுவும் நடிக்காமல் வந்த வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டார். 

இவ்வாறாக அவர் புதிய படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவரது உடல்நிலைதான் எனக் கூறப்படுகின்றது. அதாவது ராதே ஷியாம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்தபோது பூஜா ஹெக்டே கால் வலியால் அவதிப்பட்டிருக்கின்றார். 


இந்த நிலையில் தற்போது இந்த வலி அதிகமானதன் காரணமாக பூஜா ஹெக்டேவுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எது எவ்வாறாயினும் இவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement