இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபல்யமான பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா நடிப்பிலும், மிஸ்கின் இயக்கத்திலும் வெளியான 'முகமூடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். எதிர்பார்த்தது போன்றே அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து.
இதன் பின்னர் விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து மறுபடியும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் மறுபடியும் மற்ற மொழி படங்களில் தன்னுடைய கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமன்றி 'பீஸ்ட்' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களிலிருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.
அந்த வரிசையில் தற்போது சல்மான் கானுடன் இணைந்து புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார் பூஜா ஹெக்டே. அந்த படத்தின் படப்பிடிப்பு செல்லும் போது விமானநிலையத்தில் இருவரும் மீடியாவை சந்தித்துவிட்டு சென்றனர்.
அப்போது பூஜா ஹெக்டேவை கட்டிபிடித்துவிட்டு காரில் வழி அனுப்பிவைத்தார் சல்மான் கான். மேலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகில் 56 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
Salman Khan and Pooja Hegde Returned from Shooting of Bhaijaan, Spotted at Mumbai Airport.#therealityhunt #salmankhan #poojahegde #mumbaiairport #latestvideo #reel #salmankhanfans #salmankhanlovers #poojahegdefans #bhaijaan #shooting #trhupdates pic.twitter.com/aArp2CnAXW
Listen News!