2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதனைத் தொடர்ந்து தமிழில் படவாய்ப்புக்கள் கிடைக்காததால் பாலிவூட் சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.
இவர் தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தையும் பெற்றெடுத்தார்.
இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை. அதையடுத்து சில முறை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகத்தை மறைத்தே வெளியிடுவார்.
அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திலும் குழந்தையின் முகத்தை மறைத்தே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Listen News!