• Nov 19 2024

நடிகை ராதா வீட்டில் விசேஷம்... சைலண்டாக முடிந்த நிச்சயதார்த்தம்... "கோ" பட நடிகைக்கு கல்யாணம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

'கோ' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கார்த்திகா.கோ திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து 'என்னமோ ஏதோ', 'அமுலி துமிலி' பாடல்களில் ரசிக்க வைத்தார். இப்பாடலின் மூலமாக இன்றும் ரசிகர்களின் நியாபகத்தில் இருக்கிறார் இவர். இந்நிலையில் கார்த்திகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை  ராதா அவரின் மகளான கார்த்திகாவும் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ராதிகாவின் மூத்த மகளான கார்த்திகா 'கோ' படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே கார்த்திகாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களின் லிஸ்டில் இருக்கிறது.


'கோ' படத்தினை தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள கார்த்திகா, தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதில் தனது வருங்கால கணவரை கட்டிப்பிடித்தபடி மோதிரம் அணிந்த படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கார்த்திகாவின் திருமணம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இவர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்இவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  


Advertisement

Advertisement