கிழக்கே போகும் ரயில் திரைப்பத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா.
இவர் 80களில் கதாநாயகியாக அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பது தெரிந்ததே. அத்தோடு இவருக்கென்று ஓர் ரசிகர் பட்டாளமே உள்ளது.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து கொடிகட்டி பறந்த ஒரு நடிகை இவர்.
இந்நிலையில் நடிகை ராதிகா இன்று அவரது 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமாவை நடிகர்கள் பலரும் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.இன்று நடந்த அவரது பிறந்தநாள் பார்ட்டியில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு ராதிகா அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்டுடன் பிறந்த மகள் தான் ரயானே. அவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ராதிகாவின் இளம் வயது போட்டோக்களை ரயானே வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது நீச்சல் உடை போட்டோவும் இருக்கிறது.
Listen News!