• Sep 20 2024

புத்தம் புதிய மெர்சிடஸ் கார் வாங்கிய நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்- அதன் பெறுமதி இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ராகுல் ப்ரீத்தி சிங். இவர் இதனைத் தொடர்ந்து  தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் கதைக்களமாக உருவாகியுள்ள இப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.இத தவிர ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர சமீபகாலமாக பாலிவூட் சினிமாவிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் மெர்சிடஸ் கார் ஒன்றை தற்போது புதிதாக வாங்கி இறக்கி இருக்கிறார். இவர் 3.5 கோடிக்கு பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இன்று காலை ரகுல் ப்ரீத் சிங்கின் வீட்டுக்கு வெளியே அந்த சொகுசு கார் வந்து இறங்கிய நிலையில், மும்பையில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.புதிய கார் வாங்கியது குறித்து நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு போஸ்ட்டும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement