ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபேயில் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் டிகை ராஷி கன்னா. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த பிரபல்யமான நடிகையாக வலம் வருகின்றார்.
அந்த வகையில் தெலுங்கில் ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கின அதனால் அடங்கமறு,அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மைனை 3 படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார்.தற்போது கூட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து இருந்தார். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்த கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டது.
அவர் ஆரம்பகட்டத்தில் குண்டாக இருந்ததால் சந்தித்த ட்ரோல்கள் பற்றி அவர் சமீபத்தில் பேசி இருந்தார்.அதாவது தன்னை கேஸ் டேங்கர் என்று கூட ட்ரோல் செய்தார்கள் என கூறிய அவர், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படிப்படியாக தனது உடல் எடையை குறைத்ததாக தெரிவித்தார்.
தற்போது பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் அதிகம் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் வெள்ளை உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!