• Sep 20 2024

சூப்பர் ஸ்டாரை சரமாரியாக விளாசி தள்ளிய நடிகை ரோஜா.. சிக்கலில் மாட்டி முழிக்கும் ரஜினி..! காரணம் இது தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படப்பிடிப்புகளில் பிஸியாக வேலை செய்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரொம்பவும் வெளிப்படையாக பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். 

இப்போது சமீபத்தில் இரண்டு, மூன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், தன்னுடைய உடல்நிலை பற்றியும் கூட வெளிப்படையாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதேபோன்று நேற்று ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரஜினி. அதில் ஆந்திர மக்களிடம் ரொம்பவும் நட்புடன், சரளமாக தெலுங்கில் பேசியிருந்தார்.

அந்த மேடையில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்திருந்தார். அவரை பற்றி பேசிய ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவிடம் எதிர்காலத்தைப் பற்றிய பல திட்டங்கள் இருக்கிறது என்றும், அவர் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும், அப்படி மீண்டும் முதலமைச்சர் ஆகும் பொழுது உண்மையாகவே என்டிஆர் ஆசிமலை பொழிவார் என்றும், சந்திரபாபு ஆட்சியில் ஆந்திர தேசம் மிகப்பெரிய அளவில் முன்னேறும் என்றும் சொல்லியிருந்தார்.ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று பதிலளித்திருக்கிறார். அதில் ரஜினி ஒரு ஹீரோ என்பதால் உண்மை எதுவும் தெரியாமல் பேசுகிறாரா, அல்லது சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பஜனைக் கூட்டத்தில் பேசுவது போல் பேசிவிட்டு சென்றிருக்கிறாரா, அவர் பேசுவதை கேட்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையில் சந்திரபாபு நாயுடுவின் மாமனாரான என்டிஆர் ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியும். அவர் இறப்பதற்கு முன்பு சந்திரபாபு ஒரு திருடன் என்றும், ஈர துணியை வைத்து கழுத்தை அறுப்பவன் என்றும் மீடியா முன்பு பேசி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது சந்திரபாபுவுக்கு என் டி ஆர் ஆசி வழங்குவார் என்று ரஜினி பேசிய பேச்சு தான் ரோஜா இப்படி பதிலடி கொடுத்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்த்தக்கது.

Advertisement

Advertisement