• Sep 20 2024

பிரபல நடிகரின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய நடிகை சமந்தா…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகின்றார். தனது காதல் கணவரை விவாகரத்துக்கு செய்ததன் பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. அத்தோடு விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடிக்கும் புதிய படமும் தயாராகி வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை படக்குழு நள்ளிரவில் கொண்டாடியுள்ளார்.

அப்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Advertisement