• Sep 20 2024

நடிகை சமந்தா இடத்தை பிடித்த இளம் ஹீரோயின்.. யார், அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

குஷி படத்தை தொடர்ந்து உலகளவில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பில் தான் சமந்தா நடிக்கிறார்.

தொடர்ந்து பிசியாக நடித்து வந்த சமந்தா தற்போது ஆன்மிகம் மற்றும் சிகிச்சைகாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது தோழியுடன் சுற்றி திரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று புஷ்பா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று சமந்தாவின் நடனம்.

'உ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா புஷ்பா படத்தில் நடனம் ஆடி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் புஷ்பா 2 படத்திலும் அதே போல் பாடலுக்கு சமந்தா நடனமாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடக்கப்போவதில்லை என தகவல் ஏற்கனவே வெளிவந்தது. ஆனால், அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடனம் ஆடுவார் என சொல்லப்படுகிறது 

அந்தவகையில் பல பாலிவுட் நடிகைகளின் பெயர் இதில் அடிபட்ட நிலையில், தற்போது சமந்தாவின் இடத்தை தெலுங்கு திரையுலகின் இளம் சென்சேஷன் ஹீரோயின் ஸ்ரீ லீலா பிடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

புஷ்பா 2 படத்தில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தாவிற்கு பதிலாக இளம் நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆட போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே மேலதிக அப்டேட்களுக்காக காத்திருப்போம்.


Advertisement

Advertisement