மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது குஷி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதுதவிர நடிகை சமந்தா நடித்துள்ள சகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். குணசேகரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இதன் புரமோஷன் பணிகளை தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ பெடம்மா தல்லி கோயிலில் பூஜை செய்து சகுந்தலம் படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கினர். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா, இப்படத்திற்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் சகுந்தலம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராணி மாதிரியே இருக்கின்றீங்க என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!