தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.இவர் இயக்குநர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர்.
சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வவ்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சுற்றுலா சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் Monkey Forest Ubud Bali - இல் குரங்குகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
Listen News!