• Sep 21 2024

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நடிகை சமந்தா-இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமான நடிகை சமந்தா இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். இதற்கு முதல் காரணம் என்றால் அது அவருடைய அயராத நடிப்புத்திறனே.

தொடர்ந்து , காத்து வாக்குல 2 காதல் படத்தை தொடர்ந்து சமந்தா இப்போது தெலுங்கில் விஜய் தேவர;கொண்டாவுடன் இணைந்து புதிய படம் நடித்து வருகின்றார்.அப்படத்திற்கு குஷி என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்ள கூட சமீபத்தில் தான் ரீலீஸ் ஆனது.

இந்நிலையில் இந்தியாவின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிகழ்ச்சியை தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.தெலுங்கில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கவுள்ளது .நாகர்ஜுனாபடப்பிடிப்பு காரணமாக தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக நடிகை சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement