• Nov 19 2024

மீண்டும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா- வைரலாகி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த நோய் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்த கொண்டு சிறப்பித்தார்.மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் அவர் பங்கேற்ற முதல் பட நிகழ்ச்சி இது என்பதால் இந்த விழாவில் பேசும்போதும் சற்று எமோஷனல் ஆன சமந்தா கண்ணீர்விட்டு அழுதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

அதுமட்டுமின்றி எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சினிமா மீதான காதலை மட்டும் தான் இழக்கவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் சமந்தா பேசியிருந்தார்.மேலும் தற்பொழுது ஆன்மீகத்தில் தற்பொழுது அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.


அத்தோடு சில நாட்களுக்கு முதல் படப்பிடிப்புக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார். இந்த நிலையில் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்து கூறி வருவதோடு அவரின் தன் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement