• Nov 10 2024

நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமாம்-அடடே இதுவும் காதல் திருமணமா..? மாப்பிள்ளை இவர் தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வரம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் ,குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவை விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்த திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது



இவ்வாறுஇருக்கையில்  இவர் பிரபல நடிகரான நாகசைத்தன்யாவைக் காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் சில ஆண்டுகளிலேயெ இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டுப் பிரிந்து கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.



அவர்களது பிரிவு பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் விவாகரத்து பின் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக சில தகவல் வெளிவந்தன. ஆனால், அதுகுறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.



இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் சொல்லப்படுகின்றது.



Advertisement

Advertisement