தமிழ் சினிமாவில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்துள்ளவர் தான் சம்யுக்தா ஹெக்டே.இவர் கோமாளி திரைப்படத்தில் பள்ளி பருவ காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது அவர் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குநர் அபிஷேக் பசந்த் இயக்கி வருகிறார்.சோஷியல் த்ரில்லர் படமான க்ரீமின் செட்டில் ஒரு ரிஸ்க்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது சம்யுக்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கணுக்கால் மற்றும் முழங்காலில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சம்யுக்தா தன்னை வற்புறுத்தி ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே செய்ததாக இயக்குநர் அபிஷேக் பசந்த் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் சிகிச்சை குணமடைந்து நடிகை சம்யுக்தா ஹெக்டே வீடு திரும்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு மற்றும் புகைப்படம் வைரலாகியுள்ளது. சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக மிக கடினமாக உணர்ந்தேன்.எனக்கு என் குடும்பத்தினர் அருகில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.இன்று காலை பொழுது சந்தோசமாக ஆரம்பித்துள்ளது என்று சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொன்ன தனுஷ்- எமோஷனலான வீடியோ
- அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகின்றேன்- ஏ.ஆர் ரகுமானின் பதிவால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்
- காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவுடன் பார்ட்டிக்கு சென்ற சமந்தா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்
- அஜித்தின் வெற்றியின் சீக்ரெட் இது தான்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறிய முக்கிய டிப்ஸ்
- கோபிக்கு விவாகரத்துக் கொடுக்க முடிவு செய்த பாக்யா- அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தார்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!