ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் தளபதி விஜயின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கின்றார். ஹிந்தி சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்
2009ல் லண்டனை சேர்ந்த தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கும் ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. சமீபத்தில் இவர் நடித்த சுகி என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு ஹிந்தி திரையுலகில் நல்ல வரவேற்பு இருந்தது.
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் இருவருமே ஹிந்தி சினிமாவில் மிக பிரபலம். இந்நிலையில், ராஜ் குந்த்ராவின் பதிவு ஹிந்தி சினிமா வட்டாரங்கள் மட்டுமன்றி அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ராஜ் குந்த்ரா அவரது X தள பதிவில் "நாங்கள் பிரிந்துவிட்டோம், இந்த கடினமான சூழலை கடக்க, எங்களுக்கு நேரம் தாருங்கள்" என பதிவிட்டிருந்தார். அவரது அந்த பதிவில் யாரை பிரிக்கிறார், எதற்கு பிரிகிறார் என எந்த விஷயமும் கூறப்படவில்லை.
https://twitter.com/onlyrajkundra/status/1715087250151923993?t=VhHS3OdpAIZfp2UWiJrowg&s=19
Listen News!