• Sep 20 2024

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கிளாமரில் குறைவைக்காத நடிகை ஷிவானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு.இவருக்கு நடிகர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து ரெட்காட் கொடுக்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் அந்த தடைகள் யாவும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.


படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் இரு பாடல்கள் வடிவேலு குரலில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இன்று இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நாய் திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தில் நடிகை ஷிவானி நாராயணன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டதற்கு பலனாக முதல் படமே வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.


கிளாமரில் எப்போதும் குறை வைக்காத ஷிவானி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் குறைவைக்காமல் நீச்சல் ஆடையிலும் நடித்திருக்கிறார். இதனை இன்று வெளியாகிய ட்ரெய்லரில் காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement