• Sep 20 2024

மகள் ராதாவிற்கு காது குத்திய புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஸ்ரேயா-கியூட்டான போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் விஜய், விஷால், ஜீவா போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு தெலுங்கு மலையாளம் ஆகிய மொழியிலும் நடித்த இவர் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டதால் சில காலம் சினிமாவை விட்ட விலகியிருந்து தற்பொழுது மீண்டும் ரீ என் ரீ கொடுத்து நடித்து வருகின்றார்.

மேலும் Andrei Koscheev என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா அவருடன் ஸ்பேயினிலெ செட்டிலாகி வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ராதா என்ற மகளும் உள்ளார், அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது ஸ்ரேயா அவரின் மகள் ராதாவிற்கு காது குத்தியுள்ளதை புகைப்படமாக எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement