தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் இறுதியாக இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் மழை ,அழகிய தமிழ் மகன், குட்டி, தோரணை, சிவாஜி எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார். அண்மையில் தனது காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராதா என்கின்ற பெண் குழந்தையும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் மாலை தீவுக்கு சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருப்பதைக் காணலாம்.
Listen News!