தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் விஜய், ரஜினி, விஷால் ,ஜெயம் ரவி ,தனுஷ் எனப் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். மேலும் சினிமாவில் இவர் நுழைய முதல் மாடல் அழகியாகவும் இருந்ததோடு விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்தவர்.
இவர் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலமே அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தான் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து நடித்து வந்த இவர் படவாய்ப்புக்கள் குறைந்ததால் ரஷ்யாவைச் சேர்ந்த கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டிலே ஸ்ரேயா செட்டில் ஆனார். இவருக்கு ராதா என்னும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள், ராதா சரண் கோஸ்சீவ்னுடன் மழையில் நனைத்தபடி ஆட்டம் போட்டுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
- பிரபல நடிகைக்கு வீடு தேடி வந்த கொலை மிரட்டல்…பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!
- மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு இதுதானாம்..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!