தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் 'மழை' படத்தில் சொட்டும் மழையில் நனைந்து கொண்டு அசத்தலாக போட்ட நடனம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது .
அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'சிவாஜி' படத்தில் வாஜி வாஜி பாடலுக்கு அவர் போட்ட கிளாமர் டான்ஸால் கவர்ச்சி குயினாக வலம் வந்தார் .அதனைத் தொடர்ந்து விஜய், விக்ரம் என பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
தற்போது இவர் சீனியர் நடிகை ஆகிவிட்டாலும் தொடர்ந்தும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதாவது 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் 'கப்ஸா , த்ரிஷ்யம் 2' உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. தெலுங்கில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த இவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருந்தது .
சிறுது காலத்தின் பின்னர் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் தனது நீண்டநாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரியாவுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
இந்நிலையில் இவரது லேடஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது..இதோ அந்த புகைப்படம்...
Listen News!