• Sep 20 2024

சலார் படத்தின் சம்பள அதிகரிப்பால் திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ருதிஹாசன்- இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமால் இயக்கநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிஹாசன். வாரிசு நடிகையாக இருந்தாலும் தனது தனித்திறமையால் சினிமாவில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

நடிப்பதில் மட்டுமல்லாது சிறப்பாக பாடல் பாடக் கூடியவராகவும் நடனம் ஆடக் கூடியவராகவும் இருந்து வருகின்றார்.அந்த வகையில் தமிழில் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


மேலும் தமிழில் படவாய்ப்புக்கள் குறைந்தாலும் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்து சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

 இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதன்மூலம் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement