பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருவர் தான் நடிகை சோனம் கபூர். இவர் பிரபல நடிகரான பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்பதும் யாவரும் அறிந்ததே.இவர் நடிப்கைத் தாண்டி மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
கடந்த 2007ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வரும் இவர் ஸ்டைலாக நிறைய போட்டோ ஷுட்கள் செய்து மக்களை அசத்தியுள்ளார்,இவர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
2018ம் ஆண்டு இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது. இதற்கு திரையுலகப் பிரபலங்கள் உறவினர்கள் உனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!