• Sep 22 2024

நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு: விருந்தினர்களுக்கு என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வருபவர் சோனம் கபூர்.இவர் பிரபல தயாரிப்பாளரான அனில் கபூரின் மகளும் ஆவார்.

மேலும் 2007 ம் ஆண்டு`ஹிந்தி சினிமாவின் முன்னணி இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சாவரியா படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித் வந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த சோனம் கபூர் அண்மையில் தான் கர்ப்பமாகி இருக்கும் செய்தியை வெளியிட்டார்.அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

லண்டனில் வைத்து அவருக்கு வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சோனம். சோனம் கைக்குட்டையில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் அழகான பையில் செயின் பரிசாக கொடுக்கப்பட்டது. அந்த செயினில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. சோனம் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தும் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

மேலும் இது போன்ற ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என விருந்தினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் சோனம் கபூரின் வளைகாப்பு குறித்து அவரின் தங்கை ரியாவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தாத்தாவாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் அனில் கபூர். ஆனால் உங்களை பார்த்தால் தாத்தா போன்று இல்லை மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement