• Sep 20 2024

தாயாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா."வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா அவரின் அறிமுக திரைப்படத்திலேயே மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருந்தார்.

இப்படத்தில் சிவாகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடித்து தனது குறு குறு பார்வையால் இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தார்.அப்படத்தை தொடர்ந்து "ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி" என ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளன.

இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னரே மலையாளத்தில் வெளிவந்த "Thoorpu Velle Railu" என்ற சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கின்றார்.

அந்தச் சீரியல் காட்சியின் உடைய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement