• Sep 21 2024

பிரபல நடிகரின் புதுமனை புகுவிழாவில் மூச்சு முட்ட குடித்து விட்டு மயங்கி விழுந்த நடிகை ஸ்ரீ திவ்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் இமான் அண்ணாச்சி. அந்த வகையில் தனுஷ், விஷால், விஜய் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவராகவும் இருக்கின்றார்.

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்டா இமான் அண்ணாச்சி சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார். இந்த புதுமனை புகுவிழாவிற்கு தன்னுடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்களை அழைத்துள்ளார்.

இந்த விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு பார்ட்டியும் கொடுத்ததாக கூறப்படுகின்றது. எனவே இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதிவ்யா மூச்சு முட்ட குடித்து விட்டு மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சக நடிகர் நடிகைகள் அவரை மீட்டு மயக்கத்தை தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம்.

இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் அடிக்கடி சினிமா சம்மந்தமாகவும் நடிகர் நடிகைகள் குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் வெளியாகிய இந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement