• Nov 15 2024

வனிதாவின் மகள் ஜோவிதாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்- இவ்வளவு பெரிய மகளா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பின் இவர் நாயகியாக நடித்த பிரியமான தோழி, தித்திக்குதே தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ரூபிகா என பெயர் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரீதேவி ஒருசில தெலுங்கு படங்களில் நடித்தார்.


இதனை அடுத்து அவ்வப்போது ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார். அந்த வகையில் கடந்த வாரம் முடிவடைந்த ஸ்ராட் மியூசிக் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி இருந்தார். 


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய மகளுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே உங்க மகளா இது என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement