சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகை என பன்முக கலைஞராகத் திகழ்ந்து வருபவர் குட்டி பத்மினி. இவர் சமீபகாலமாக சினிமா துறையினர் சம்பந்தமான சில விஷயங்களை வெளிப்படையாக தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்
அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் சுஜாதா குறித்து பல விடயங்களை ஓபனாக கூறி உள்ளார். அதாவது "நானும் சிவகுமார் அவர்களும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான், பாலச்சந்தர் நடிகை சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின், அவர்கள் படத்தின் மூலம் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சுஜாதாவைப் பார்க்கும் போதே ரொம்ப மென்மையாகவும், அழகு பதுமையாகவும் இருந்தார். அவர்களுடையே கண், மான் கண்போல அவ்வளவு அழகாக இருக்கும். சுஜாதா சினிமாவில் நடித்த வரை அவர்கள் மீது ஒரு அவப்பெயரும் கடைசி வரைக்கும் வந்தது இல்லை. அவருடைய நடிப்பு மிகவும் கண்ணியமாக இருக்கும்" என்றார்.
அதுமட்டுமல்லாது "பொது இடத்திலோ, பொது நிகழ்ச்சிக்கோ நாங்கள் போகும் போது மோசமான கமெண்ட் வந்தது இல்லை அந்த அளவுக்கு மக்கள் சுஜாதாவை தனது குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்த்தனர். பல வெற்றிப்படங்களை கொடுத்து திறமையான நடிகை என பெயர் எடுத்தாலும், சுஜாதாவிற்கு நடிக்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மேலும் சுஜாதாவிற்கு எப்படியாவது சினிமாவை விட்டு விலகி வேண்டும், இந்த போலித்தனமாக வாழ்க்கை வேண்டாம் என்று நினைத்ததால், ஜெயகர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கலாம் என்று சொன்ன அவரது கணவர், அதன் பின் இப்படி நடி, அப்படி நடி என்று பல கண்டிஷன்களை போட்டு சுஜாதாவை பல வகையிலும் கொடுமைப்படுத்தினார்.
அத்தோடு அவரின் கணவர் ஜெயகர் ஆண் ஆதிக்க மனம் கொண்டவர், கர்வம், தலைக்கனம் பிடித்தவர் போல நடந்து கொள்வார் அவரை எப்படி சுஜாதா காதலித்தார்கள் என்பது தான் இதுவரை புரியாத புதிர். சுஜாதா தனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பேனி நடத்திக்கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தார்கள்.
அந்தவகையில் ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் ஜெயகர் பெல்டால் அடிக்கும் சத்தமும், சுஜாதா வலி தாங்கமுடியாமல் பலத்த சத்தத்துடன் அழும் சத்தம் எங்களுக்கு கேட்டது. உடனே நானும் அம்மாவும் ஓடிச்சென்று தடுத்தோம் அப்போதும் சுஜாதா பெருமையாக எதையும் பேசாமல் அழுக்கொண்டே இருந்தார்" என்றார்.
மேலும் "அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த வீட்டை காலி செய்து விட்டார்கள். எங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அவர் இறந்த செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. விஷயம் தெரிந்த ஒன்றிரண்டு நடிகர்கள் மட்டும் தான் சுஜாதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள்" எனவும் மிக உருக்கமாக பேசியிருந்தார் நடிகை குட்டி பத்மினி.
Listen News!