• Sep 19 2024

ரெஜினா திரைப்படம் குறித்து முதன் முறையாக வெளிப்படையாகப் பேசிய நடிகை சுஜைனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை சுனைனா.

இவர் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான "காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் தனக்கான ஓர் அடையாளத்தை இன்னும் பெறவில்லை எனலாம். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சதீஸ் நாயர் இசையமைத்துள்ளதோடு ப.வி.கேவன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை சுனைனா கருத்து வெளியிட்டுள்ளார். அதில் "நான் சாதாரண ஹவுஸ் வைஃப்பாக ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். இப்படத்தின் கதையைக் கூறிய விதம் என்னைக் கவர்ந்தது. அதனால் இந்தக் கேரக்டரில் நடிக்கத் தூண்டியது. என் கேரியரில் இந்தக் கதாபாத்திரம் முக்கியமான படமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement