1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி பெண் நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் நடிகை சுகன்யா. அந்தவகையில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.
ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. அதாவது கணவருடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2003-ஆம் ஆண்டே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதன்பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார் சுகன்யா. அதுமட்டுமல்லாது திருமணத்துக்கு பின்னர் இவர் நடிப்பதையும் சற்றுக் குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபலம் ஒருவர் கூறிய தகவலானது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அதாவது சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!