• Sep 20 2024

நடிகையான சூப்பர் சிங்கர் பிரியங்கா-எந்தப் படத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பலரும் தமக்கென்ற இடத்தை பிடித்துள்ளனர்.அந்தவகையில் இந்நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆனவர் தான் பிரியங்கா.

இவரது மெலேடியான குரலுக்கு எக்கச்சக்க ரசிகர்களே உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.பல ஹிட் பாடல்களை அவரது குரலில் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

மேலும்  இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று தயாராகி உள்ளது.

இந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.‘நெஞ்சே கேளு’ என்ற டைட்டில் உருவாகி வரும் புரமோஷன் பாடலில் தான் பிரியங்கா நடித்திருக்கின்றார்.


அத்தோடு இந்த பாடலின் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement