• Nov 17 2024

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு..!- இப்போது எப்படி இருக்கிறார்- வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஷ்மிதா சென். தன்னுடைய 18 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த இவர், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 1994 ஆம் ஆண்டு வென்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 

 பின்னர் 1996 ஆம் ஆண்டில் பாலிவுட் திரை உலகில் நுழைந்த இவர், தமிழில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக 'ரட்சகன்' என்னும் படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ஆர்யா என்கிற வெப் சீரிஸில், கதையின் நாயகியாக நடித்திருந்தார் 


இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, தற்போது தன்னுடைய இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


 அதேபோல் தனக்கு சற்று பெரிய இதயம் இருப்பதாக தன்னுடைய இருதய நோய் நிபுணர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், தனக்கு சரியான நேரத்தில்  உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுஷ்மிதாசன், தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த பதிவை பகிர்ந்துள்ளதாகவும், நான் மறுபடியும் வாழ தயாராக இருக்கிறேன் என உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement