தெனிந்திய சினிமாவில் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோயினாக ஸ்வாதி ரெட்டி, தமிழில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கனிமொழி, போராளி, யாக்கை, 'நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்வாதி ரெட்டிக்கு 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த பைலட் விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ஸ்வாதி ரெட்டி சமீபத்தில் தன்னுடைய கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதால், ஸ்வாதி ரெட்டி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையி நேற்று ஸ்வாதி ரெட்டி நடித்த மந்த் ஆப் மது' திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சாய் தரம் தேஜ், கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி தனக்கு மிகச்சிறந்த தோழி என்றும், இந்த படம் ஸ்வாதிக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தர வேண்டும்.. ஆல் த பெஸ்ட் ஸ்வாதி என கூறினார்.இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாதி அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே முத்தம் கொடுத்து கொடுத்துள்ளார். ஏற்கனவே இவருடைய விவாகரத்து பற்றி தகவல்கள் வெளியாகும் நிலையில் , இவர் இப்படி நடந்து கொண்டது மேலும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!