தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து சினிமா உலகில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழமை. இவர் சினிமா பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த விஷயங்களை சினிமாவோடு இணைக்காமல் அதனைத் தனியாகவே பராமரித்து வருகின்றார்.
நடிகை டாப்ஸி தற்போது 'சபாஷ் மிது' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனே மிதாலி ராஜின். 2022 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பை தூண்டிய படங்களில் இதுவும் ஒன்று.
இவ்வாறு படங்களில் பிஸியாக இருந்து வருகின்ற நடிகை டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டும் வருவார். இவ்வாறே சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில் இவர் பாவாடை, தாவணி அணிந்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.
பிற செய்திகள்
- “எனது கணவர் இப்போது வேறு திருமணம் செய்து விட்டார்”…மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம்
- நடிகை ரோஷினிக்கு கிடைத்த விருது…மகிழ்ச்சியில் ரசிகர்கள்
- நயன்தாராவின் 75-ஆவது படம் தொடர்பான புதிய அப்டேட்…யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் தெரியுமா?
- லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…நிழலாய் பின் தொடரும் சர்ச்சை
- மாஸான புகைப்படத்தை வெளியிட்ட அட்லீ…வைரலாகும் ட்விட்டர் பதிவு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!