• Sep 20 2024

அஜர்பைஜான் நாட்டில் இருப்பதை உறுதி செய்த நடிகை த்ரிஷா- விடாமுயற்சி டீமுக்கு குவியும் வாழ்த்துக்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க கமிட்டாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் தலைப்பு வெளியானதோடு இந்த படம் குறித்த தகவல்கள் அதன் பிறகு எதுவும் வெளியாகவில்லை.

தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நாளை அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜான் நாட்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தல அஜித், நாயகி திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தொடர்ச்சியாக 3 மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.


இந்த நிலையில் த்ரிஷா அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதனை உறுதி செய்துள்ளார்.அந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement